ANAS CORPORATIONS ©
புதுப்பொலிவுடனான பயன்மிகு தொழிநுட்ப தகவல்கள்!
கூகுளின் சில மேஜிக் வார்த்தைகள்...
தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன.
இந்த வார்த்தைகளை கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும். இதனை ஆங்கிலத்தில் Easter Eggs என அழைக்கப்படுகிறது.
Let it Snow: இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோவில் பனி மழை பொழியும். கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக இதனை உருவாக்கியுள்ளது.
Tilt: இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோ ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.
Do a Barrel Roll: இந்த வார்த்தையை கொடுத்தால் கூகுள் விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.
Hanukkah: இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சத்திரத்தினால் ஆன ஒரு வரி காணப்படும்.
இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை பின்தள்ளப்போகும் கம்ப்யூட்டர் !
இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கம்ப்யூட்டர் உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் ‘பியூச்சராலஜி’ (எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன. கம்ப்யூட்டர் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
கம்ப்யூட்டர், ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால், கம்ப்யூட்டர் துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கம்ப்யூட்டர்களை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள். இது மெல்ல மெல்ல மாறி, புது கம்ப்யூட்டர் உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கம்ப்யூட்டர்களே ஈடுபட தொடங்கும்.
அதன் பிறகு, மனிதனின் உதவி இல்லாமல் கம்ப்யூட்டர்கள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும். அந்த அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கம்ப்யூட்டர் ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029ல் உண்டாகும் என்று தெரிகிறது.
எல்லா ஆராய்ச்சிகளிலும் கம்ப்யூட்டரே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும். இதன்மூலம், சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில், ஒட்டுமொத்த உலகமும் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கம்ப்யூட்டர்கள் குறுக்கிடும். அப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கம்ப்யூட்டரின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால், நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும்.
இவ்வாறு கர்ஸ்வெல் கூறியுள்ளார்.
சமூக வலையமைப்புகளில் அதிக கவனத்தை ஈர்க்கும் அம்சம் எது?
நம்மில் பலர் தற்போது எதாவது ஒரு சமூகவலையமைப்பினை உபயோகித்து வருகின்றோம். இந்நிலையில் சமூக வலையமைப்புகளில் ஒருவரின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் அம்சங்கள் எவையென ஆய்வொன்றினை நடத்தியது.
இதனை 'ஐ ட்ரக் சொப்' எனப்படும் நிறுவனமொன்றே நடத்தியுள்ளது. வெப் கெமராவின் மூலம் கண்களின் அசைவுகளை அவதானிப்பதன் மூலமே இவ்வாய்வு நடத்தப்படுகின்றது.
பேஸ்புக், கூகுள் +, டுவிட்டர், கிளவுட், ஸ்டம்பல் அபொன், லின்க்டின், டிக், தம்லர் போன்ற பல தளங்களைப் பாவனையாளர்களுக்குக் காட்டி அவர்களின் பார்வை எங்கே அதிகமாக ஈர்க்கப்படுகின்றது என்பதினை வைத்தே இவ்வாய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பார்வையை ஈர்க்கும் அம்சங்கள்.
1. புரொபைல் படம்
2. தொழில்/ பதவி
3. நண்பர்கள்
பின்வரும் அச்சங்களே சமூக வலையமைப்புகளில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும் நமது புரொபைல் பக்கத்தின் கீழே இருப்பவை அதிக கவனத்தை ஈர்ப்பதில்லையெனவும் இவ்வாய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும் இவ்வாய்வின் முடிவு ஒவ்வொரு சமூக வலையமைப்புகளுக்கும் ஏற்ப வேறுபடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
இலவசமாக படங்களை வேகமாக பதிவேற்ற உதவும் பயனுள்ள இணையதளம்
நம்மிடம் இருக்கும் jpg, gif, png மற்றும் அனைத்து விதமான படங்களையும் எளிதாக ஆன்லைன் மூலம் இலவசமாக பதிவேற்றலாம். நம்முடைய தளத்தில் படங்களை எங்கு வேண்டுமோ அங்கு எளிதாக சேர்த்துக்கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படங்களை பதிவேற்ற பல இணையதளங்கள் இருந்தாலும் சில
இணையதளங்களில் நாம் பதிவேற்றம் செய்யப்படும் படங்கள்
ஒரு சில நாட்களில் தானாகவே நீக்கப்பட்டுவிடும் இந்தப்
பிரச்சினையை சரிசெய்வதற்காவும், வேகமாக படங்களை
பதிவேற்றம் செய்வதற்கும் உதவியாக நமக்கு ஒரு தளம்
உள்ளது
இணையதள முகவரி : http://fumpr.com
எந்த ஒரு பயனாளர் கணக்கும் இல்லாமல் ஆன்லைன் -ல் சாட்( அரட்டை) செய்யலாம்.
மென்பொருட்களை தங்கள் கணினியில் தரவிரக்கியும் ஒரு புதிய
பயனாளர் கணக்கு உருவாக்கியும் பயன்படுத்துகின்றனர் ஆனால் எந்த
பயனாளர் கணக்கும் இல்லாமல் ஆன்லைன் -ல் சாட் செய்யலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நண்பர்களுடனும் தெரிந்தவர்களுடனும் அரட்டை அடிக்க நமக்கு
ஒரு தளம் உதவுகிறது.





பிடித்த பெயரில் உங்களுக்கென்று ஒரு சாட் ரூம் தட்டச்சி செய்து
Create என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரை
படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது இதில் Myspace,Twitter or Facebook இதில்
எந்த ஒரு கணக்கையும் பயன்படுத்தலாம் அல்லது Don’t have one என்று
இருக்கும் கட்டத்திற்குள் பெயரை கொடுத்து Go என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் உங்கள் செல்லப்பெயரை
கொடுத்து உங்கள் உரையாடலை வேறு யாரும் பார்க்கலாமா
வேண்டாமா என்பதற்கு Allow others to broadcast என்பதில் Yes
அல்லது No என்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டு OK என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் இனி நாம் சாட் செய்ய தொடங்கலாம். நண்பர்களுக்கு
நாம் ரூம் உருவாக்கிய சாட் முகவரியை அனுப்பலாம் உதாரணமாக
நாம் http://tinychat.com/winmani என்று உருவாக்கியுள்ளோம் இதே
போல் நாம் விரும்பும் பெயரிலும் உருவாக்கி சாட் செய்யலாம்!
நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
நண்பர் ஒருவர் புதிதாக இன்வெர்டர் ( Inverter ) வாங்கி இருப்பதாகவும்
வீட்டினுள் எந்த பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுத்துகொள்கிறது
என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப்பற்றியும் கேட்டிருந்தார்
அவருக்காக மட்டுமின்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ளும்
வகையில் நம் வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள்
எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்பதை எளிதாக
கண்டுபிடிக்க ஒரு தளம் நமக்கு உதவுகிறது.
இணையதள முகவரி : http://visualization.geblogs.com/visualization/appliances/


இந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் வீட்டில் இருக்கும் மின்விசிறியில்
இருந்து மடிக்கணினி வரை ஒவ்வொரு மின்சாதன பொருளும்
எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்பதை அந்தந்த
பொருட்களை சொடுக்கி தெரிந்து கொள்ளலாம். கூடவே நாம்
பயன்படுத்தாத மின்சாதன பொருட்களை ஒவ்வொன்றாக சொடுக்கி
நீக்கி விட்டு பயன்படுத்தும் பொருட்களின் மின்சார அளவு மொத்தமாக
என்ன என்பதை நொடியில் தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக
இந்தப்பதிவு மின்சாரத்தை மிச்சப்படுத்த நினைக்கும் நண்பர்களுக்கும் இன்வெர்டர் பயன்படுத்துபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
_|-இவ்வலைப்பக்கம் மூலம் நீங்கள் பயன் பெறுவதுடன் உங்கள் நபர் மற்றும் நலன்விரும்பிகளுக்கும் அறிமுகப்படுத்த மறவாதீர்கள்! -|_
கிரிமினல் தகவல்களை (Criminal records ) சொல்லும் வித்தியாசமான இணையதளம்.
குற்றவாளிகள் பற்றிய தகவல்களை அனைத்து மக்களும் தெரிந்து
கொள்ளும் வகையில் அவர்களின் பெயர் அல்லது வசிப்பிடம்
அல்லது எந்த மாநிலம் என்பதை கொடுத்து கிரிமினல் Records
எளிதாக பார்க்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
குற்றவாளிகள் பற்றிய தகவல்களை அனைவரும் தெரிந்து
கொள்ளும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த்தளத்தில் குற்றவாளிகளின் பெயர் அல்லது முகவரி கொடுத்து
தேடினால் நமக்கு அவர்களை பற்றிய தகவல்களும் கூடவே
அவர்கள் செய்த குற்றங்கள் என்ன என்பதையும் உடனடியாக
காட்டுகிறது. வேடிக்கையாக இந்தத்தளம் தெரிந்தாலும் இதன்
பயன் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஏதாவது
குற்றம் நடக்கிறது என்றால் இதற்கு முன் இந்தப்பகுதியில்
இதே போல் குற்றம் செய்தவர்கள் யார் என்ற தகவல்களை
அனைவரும் தெரிந்து கொள்ளவும், புதிதாக நாம் ஒரு
மாநிலத்திற்கு சென்று வசிக்கும் போது அந்த மாநிலத்தில்
அடிக்கடி நடக்கும் குற்றம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வசதியாகவும் இந்ததளம் அமைந்துள்ளது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை மட்டும் இந்ததளம் கொடுக்கிறது.

இணைந்தமைக்கு நன்றி! தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்! ------- "அனஸ் கோபறேசன்ஸ்"
துயரத்திற்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்! !!!
தொழிநுட்ப தகவல்களை ஈ-மெயில் மூலம் பெற - iaanas93@live.com
‘பயனுள்ள தகவல்கள்’
இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.


உலக இசை வல்லுனர்கள் உருவாக்கும் அழகான மற்றும் மனதை
மயக்கும் ரிங்டோன் ( Ringtone ) -ஐ இலவசமாக ஆன்லைன் மூலம் தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இசைப்பிரியர்கள் மட்டுமல்லாது அனைவருக்குமே இசையின் மீது
ஒரு நாட்டம் இயற்கையாகவே இருக்கும். இசை மொழிகளை
தாண்டியது என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபிக்க உதவியாக
ஒரு தளம் உள்ளது. இந்தத்தளத்தில் உலக இசை வல்லுனர்கள்
அனைவரின் சிறந்த ரிங்டோனும் நமக்கு இலவசமாக கிடைக்கிறது.
இணையதள முகவரி : http://toneshared.com
இந்ததளத்திற்கு சென்று நாம் நமக்கு உலக அளவில் விரும்பிய
இசைக்கலைஞர்களை தேர்ந்தெடுத்தால் அவர்கள் கொடுத்திருக்கும்
இசையை எளிதாக ரிங்டோனாக இலவசமாக தரவிரக்கலாம்.
ஒவ்வொரு கலைஞர்களின் இசைக்கும் ஒவ்வொரு தளமாக
சென்று தேடாமல் ஒரே தளத்தில் இருந்து கொண்டு அனைத்து
பிரபலமான இசைக்கலைஞர்களின் இசையையும் ஆன்லைன்
மூலம் Play செய்து கேட்கலாம், தரவிரக்கலாம். இசைப்பிரியர்கள்
மட்டுமல்லாது அலைபேசி வைத்திருக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
CONTACT ME ... (+94776633902)
THANK YOU!
செயல் சிறிதோ, பெரிதோ, தம்மால் செய்யக்கூடியவற்றைச் சலிப்பின்றிச் செய்பவரே போற்றுதற்குரியவர்.
© ORIGINAL Anas Web ®
ANAS CORPORATIONS unltd ..

